இந்தத் திட்டம் பற்றி

அமாவாசை நாட்காட்டி, உலகின் எந்த ஊருக்கும் அந்த ஊரின் சூரிய உதயப்படி அமாவாசை தேதிகளைக் கணக்கிடும் ஒரு சுயாதீனத் திட்டம். இது எந்த மத அமைப்பையும் சார்ந்தது அல்ல.

திருக்கணித முறை

சூரியன், சந்திரன் நிலைகள் நவீன வானியல் முறையில் — நாசா JPL-இன் DE421 வானியல் அட்டவணை, Skyfield மென்பொருள் நூலகம் கொண்டு — கணக்கிடப்படுகின்றன. சூரிய உதயமும் அஸ்தமனமும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஊரின் அட்சரேகை, தீர்க்கரேகை, நேர மண்டலத்துக்குக் கணக்கிடப்படுகின்றன.

வாக்கிய பஞ்சாங்கத்துடன் வேறுபாடு

தமிழ்நாட்டில் பல உள்ளூர் நாட்காட்டிகள் வாக்கிய முறையைப் பின்பற்றுகின்றன. இரு முறைகளும் கோள்களின் நிலையை வெவ்வேறு விதமாகக் கணக்கிடுவதால், திதி நேரங்கள் வேறுபடும்; சில சமயம் தேதியே ஒரு நாள் மாறலாம்.

இத்தளம் பின்பற்றும் விதிகள்

  • அமாவாசை தேதி: உங்கள் ஊரின் சூரிய உதய நேரத்தில் அமாவாசை திதி நடப்பில் உள்ள நாள். இரண்டு சூரிய உதயங்களுக்கு இடையிலேயே திதி தொடங்கி முடிந்துவிட்டால் (தேய்வு திதி), முந்தைய உதய நாள்.
  • தமிழ் மாதம்: சூரியன் ராசி மாறும் நேரம் (சங்கிரமணம்) உங்கள் ஊரின் சூரிய அஸ்தமனத்துக்கு முன் என்றால் அன்றே மாதப் பிறப்பு; பின் என்றால் மறுநாள்.
  • தை, ஆடி, மகாளய அமாவாசை: இவற்றுக்கும் இதே சூரிய உதய விதி. சில பஞ்சாங்கங்கள் இவற்றை அபராஹ்ண (பிற்பகல்) கால விதிப்படி குறிப்பதால், அவற்றின் தேதி இங்குள்ளதைவிட ஒரு நாள் முன்னதாக இருக்கலாம்.
  • ஒரே தமிழ் மாதத்தில் இரண்டு அமாவாசை: இரண்டுக்கும் பெயர் காட்டப்பட்டு, அறிவிப்பும் தரப்படுகிறது.
  • அஸ்தமனத்தை ஒட்டிய சங்கிரமணம்: சங்கிரமணம் உங்கள் ஊரின் சூரிய அஸ்தமனத்துக்கு 10 நிமிடங்களுக்குள் நிகழ்ந்தால், தமிழ்த் தேதி பஞ்சாங்கத்துக்குப் பஞ்சாங்கம் ஒரு நாள் மாறலாம் என்று அறிவிப்பு காட்டப்படுகிறது.
  • சங்கிரமண நேரம்: 2021–2031 ஆண்டுகளுக்கு வெளியிடப்பட்ட திருக்கணித சங்கிரமண நேரங்களுடன் ±1 நிமிடத்துக்குள் ஒத்துப்போகிறது.

வாக்கிய பஞ்சாங்க காலண்டர்களில் ஒரு நாள் வேறுபடலாம். உங்கள் குடும்ப வழக்கம் அல்லது புரோகிதரின் ஆலோசனைப்படி கடைப்பிடிக்கவும்.

காலண்டரில் சேர்க்க

அமாவாசை தேதிகளை ICS கோப்பாகப் பதிவிறக்கி Google Calendar, Apple Calendar, Outlook போன்றவற்றில் சேர்க்கலாம்.

தரவு ஆதாரங்கள்

  • சூரிய, சந்திர நிலைகள்: நாசா JPL DE421 வானியல் அட்டவணை (Skyfield நூலகம் வழியாக).
  • ஊர்த் தரவு: GeoNames (CC BY 4.0 உரிமத்தின் கீழ்).
  • தமிழ் ஆண்டுப் பெயர்கள்: sakalam.org, தமிழ் விக்கிப்பீடியா

பிழை கண்டாலோ ஆலோசனை இருந்தாலோ எங்களுக்கு எழுதுங்கள்: கருத்து தெரிவிக்க

உங்கள் ஊருக்கான அமாவாசை தேதிகள்